பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66


நாசம்னு அப்பா அந்தக் காலத்திலே படிச்சுப் படிச்சுச் சொல்வாங்களே! ட்ரியோ! ம்...ஒடித் தொலையுங்க. (அப்பொழுது மாணிக்கம் சன்னக் குரலெடுத் துப் பாடுகிருன்..! " ஆத்தோரம் கொடிக்காலாம். அரும்பரும்பா வெத்திலையாம்!" - Q5arಒT: யார் பாடுருங்க? அக்கரைச் சீமைக்குப் போயிட்டு வந்திருக்கிற அத்தை மகன் குரலாட்டமே அச்சாயிருக்குதே? மாணிக்கம்: இந்த மாணிக்கத்தைத் தவிர அழகான இந்தத் தெம்மாங்கை இவ்வளவு அக்கறையோட பாடறதுக்கு இந்தச் சுத்து வட்டத்திலே வேறு யார் இருக் காங்க?...நாம ரெண்டு பேரும் திக்குக்குத் திக்கு பிரிஞ் சிட்டாலும், நம்மோட பரிசுத்தமான அன்புக்கு அடை யாளமா இந்தத் தெம்மாங்குப் பாட்டு எப்பவும் காத்தில் சுத்திக்கிட்டே இருக்கும், தெய்வானே! தெய்: ம்! மாணி: உன் வீட்டுக்காரர் கந்தசாமி புதுக் கோட்டைச் சந்தைக்கு மாடு வாங்க போயிருக்காராமே; திரும்ப நாளைக் கழிச்சுத்தானே வருவாரு? தெய்: ஆமாங்க, மச்சான்! மாணி: நான் வந்து அஞ்சு நாளாச்சு. ஒரு வாட்டி யாச்சும் உன்னே நேருக்கு நேராக் கண்டு பேசனும்னு மனது,துடிச்சுது. இப்பத்தான் முடிஞ்சுது! தெய்வானை, உன் முகம் ஏன் அதுக்குள்ளே மாறிடுச்சு?