பக்கம்:தெம்மாங்குத் தெய்வானை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8↑ மாணிக்கம்: தெய்வானை என்னைப் பத்தின.ஒரு பயங்கரமான ஒரு ரகசியத்தைச் சொல்லத்தான் உன்னைத் தனியாகக் கூப்பிட்டேன். + #3. . . - - தெய்: சொல்லுங்க, மச்சான்! மாணி: தெய்வானை, அந்த நாளிலே நீ என் நெஞ்சி லேயும் விளையாடினே; விளையாட்டும் காட்டினே; உன்னை நான் எம் மனக் கோயிலிலே தெய்வமாக்கிக்கிட்டேன்; காளி ஆத்தாளுக்கும் இது பொறுக்கலை போலே. உன்னை யும் என்னையும் காட்டுக்கும் மேட்டுக்குமாப் பிரிச்சுப் பிட்டது!... . ஆ,ை இன்னிக்கும் நீதான் தெய்வமா மாறி என்னைக் காப்பாத்தணும். தெய்: உங்க பேச்சு ஒண்ணுமே மனசுக்கு மட்டுப் படலீங்களே?... மாணி: தெய்வானை கோடி வீட்டு சின்னமுத்து மாப்பிள்ளேக் கோலத்திலே இருக்கும்; அது கையிலே நம்ம கோவிந்தம்மாவை ஒப்படைச்சுப்பிடு. தெய்: (பதட்டத்துடன்) நீங்க!...... மாணி, நான்..... நான் என்னை மறந்து எம்பிட்டோ நாளாயிடுச்சு; என்னை நானே திருத்திக்கிடலாம்னுதான்' மெனக்கெட்டுப் பார்த்தேன்; முடியல்லே! ஆனதாலே தான் என் உடலை மட்டும் கோவிந்தம்மா கையிலே ஒப் படைச்சு, என்னைப்போல அதையும் நடைப்பிணமா ஆக்க விரும்பலே!...இன்னிக்கே அக்கரைச் சீமையை நாடி ஒடப் போடறேன் நான்...என்ைேட துல்லியமான நெஞ்சிலேயும் பரிசுத்தமான நெனப்பிலேயும் தோணிக் கிட்டே இருக்கப் போற அந்த அன்புத் தெய்வம்தான் இனி என்னை வாழ வைக்கப் போகுது; வாழ்த்தவும்