பக்கம்:தெய்வங்களும் சமூக மரபுகளும்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இப்பங்கீட்டுத் தெய்வத்தை 'மீர' (More) என்று அழைத்ததாகக் கிரேக்கத்தின் பழைய புராணங்கள் பேசுகின்றன. அடுத்த கட்ட வளர்ச்சியில், இவ்வகையான ஆனால், பங்கீட்டு விவசாயம் வாழ்க்கை இனக்குழு மக்களிடையே மறைந்து போகிறது. பங்கீட்டுத் தெய்வமும் மறைந்து போய்விடுகிறது. தமக்கு உரிய பங்கு கிடைக்கவில்லை என்ற நிலையில் மக்கள் சிலர் புலம்புகின்றனர் பிறகு பங்கீட்டுத் தெய்வங்கள் பற்றிய செய்திகள் கதைபாக மிஞ்சுகின்றன. பின் அவையும் மறைந்துபோய் விடுகின்றது. ஒவ்வோர் கட்ட வளர்ச்சியிலும் அதற்கு முந்திய கட்ட வளர்ச்சி அடிபுரமாகப் போய்விடுகின்றனது வளர்ந்தபோது கால்நடை வளர்ப்பு அழிந்து போகவில்லை. மாறாக விவசாயத்தின் துணைத் தொழிலாகி விடுகிறது. உதாரணமாக கிருஷ்ணன், பலராமன் என்ற இ தெய்வங்களை எடுத்துக் கொள்வோம். கிருஷ்ணன், விருஷ்ணி யாதவர் எனப்பட்ட கால்நடை வளர்க்கும் தொழிலையுடைய இரு குழுக்களின் தலைவன் ஆவான். பலராமன். சாத்துவதர் (Satvala) எனப்பட்ட உழவர்களின் குழுத்தலைவன் ஆவான். காட்டில் இசைக்கருவியான புல்லாங்குழலைக் மாடு மேய்ப்பவர்களின் கிருஷ்ணன் கையில் பார்க்கிறோம். உழவர்களின் குழுத் தலைவனான பலராமனோ கையில் கலப்பை ஏந்தியுள்ளான். இத்தெய்வங்களைப் பற்றிய புராணக் கதைகளும், இவற்றின் இயல்பை நன்கு உணர்த்துவன. பலராமன் நிறைய. மது குடிப்பவன். ஒரு முறை மதுவெறியால் ஒரு மரத்தடியில் சாய்ந்து கொண்டு நீராடுவதற்காக தன்னிடம் வருமாறு யமுனை(நதி)யை அழைக்கிறான். அவள் வர மறுக்கிறாள் உடனே தன் ஆயுதமான கலப்பையை வீசி எறிந்து அவளைத் தன்னிடத்திலே வரவழைத்து விடுகிறான். இக்கதையின் உண்மையான பொருள் என்ன? 7