________________
அம்முரண்பாட்டின் வெளிப்பாடே தந்தை ஏவியதனால் மகன் பரசுராமன் தாயைக் கொன்ற கதையாகும். ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் ஒவ்வொரு தெய்வத்தைப் பற்றியும் கதைகள் நிறையப் பெருகி விடுகின்றன. கிட்டத்தட்ட ஒற்றுமையுடைய தெய்வக் கதைகள் ஒன்றோடொன்று கலந்து விடுகின்றன. இரண்டு மூன்று தெய்வ வழிபாடுகள் ஒன்றாகக் கலந்து ஒரே தெய்வ வழிபாடாகப் பரிணமித்து விடுகின்றன. அநேகமாக இன்றுள்ள சிவ வழிபாடு முருக வழிபாடு. விஷ்ணு, (திருமால்) வழிபாடு, இவையெல்லாம் பலவகை வழிபாடுகள் ஒன்றாகக் கலந்து ஒரே தெய்வ வழிபாடாகப் பரிணமித்தவைதான். அரப்பா நாகரிகத்தின் பசுபதி வழிபாடு. வேதத்திலுள்ள ருத்ர வழிபாடு. தமிழ்நாட்டில் நிலவிய தறி வழிபாடு-இந்த மூன்றும் கலந்ததே சிவ வழிபாட்டின் அடிப்படையாகும். வட இந்தியாவில் பிறந்த கந்த வழிபாடு, தமிழ்நாட்டின் முருக வழிபாடு,கிழக்கிந்தியப் பகுதிகளில் பிறந்த கார்த்திகேய வழிபாடு - இவை அனைத்தும் சேர்ந்த கலவைதான் இன்றுள்ள முருக வழிபாடாகும். வாசுதேவ கிருஷ்ண வழிபாடு, பலராம வழிபாடு. வேதத்தின் நாராணய வழிபாடு - அனைத்தும் கலந்தே விஷ்ணு வழிபாடு உருவாயிற்று. இனக்குழு வாழ்க்கையுடைய மக்களின் வழிபாட்டு முறைகள், அரசுகள் உருவாகியபோது கலந்து பெருவழிபாட்டு நெறியாக (cult) உருவெடுத்து, மதம் என்ற நிலைக்கு வளர்ந்தன. வை சுருக்கமாகச் சொல்வதானால், ஆதி மனிதக் கூட்டம் உணவுத் தேவைக்காகவே அச்சத்துடனும், ஆச்சரிய உணர்வோடும் இயற்கையை வணங்கியது. சமூகத்தின் ஒவ்வொரு வளர்ச்சிக் கட்டத்திலும் சமூகத் தேவைகள் மாறி, வளர்ந்து, பெருகும் போது கதைகளும் புராணங்களும் அதற்குத்தக வளர்ந்தன. அரசுகள்