பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106


வேறு சால் ஜாப்பு
 தேவை இல்லை ; காட்டிவிடும்.

நாட்டுக்கு ஒரு
பாணி; எந்த
வாணியையும் அது
குறித்து விடும் ;

 சீதை சனகன் மகள் ;
 மண்ணில் கிடந்தவள் ;
 சனகனால் வளர்ந்தவள் ;
 அவள் சாதி ஊர்
 அடிப்படை தெரியாது ;
 அவளுக்கு எந்த
 முத்திரையும் கிடையாது.

காவிய நாயகிகளை
 ஒர் ஒவியம் கொண்டுதான்
 உணர்த்த முடியும்.

இராமன் எழுதி வைத்த
 ஒவியம்; அது சொற்
 காவியம்; அவன்
 சொல்ல அனுமன்
 கேட்டு வைத்தான் ;

காலடிகள் தாமரை ;
 கணைக்கால் விரால்மீன் ;
 தொடை வாழை ;
 இடை உள்ளுறை"
 இப்படி அடி, தொடை, நடை
 சீர், பா இவற்றின்