பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107


இலக்கணத்தை இயம்பினான்;
 "உள்ளுறை வெளிப்படாது" என்றான்.

 அழகி என்று பட்டால்
 அப்படி ஒருத்தி எதிர்பட்டால்
 அவளைச் சீதை என்று
 அறிவித்து விடு; பிறகு
 பார்த்துக் கொள்ளலாம்"
 என்றான் இராமன்.

 ஆள் மாற்றம் ஏற்பட்டால்
 பேச்சுக் கொடுத்துத்
 தெரிந்து கொள்ளலாம்"
 என்று சில அந்தரங்கங்களை
 அம்பலப்படுத்தினான்;
 இருவருக்கும் ஏற்பட்ட
 ஆடல் உரைகள் ஒருசில ஒதினான்.

"விட்டுப் பிரிகிறேன்" என்ற போது
"பிரிவினும் சுடுமோ காடு”
 என்று சூடாகக் கேட்டாள்.

 மதிலைக் கடப்பதற்கு முன்
 "வந்ததோ அடவி" என்று
 அவசரப் பட்டாள்.

 வில்லை முறித்த போது
 "வீரன் அவன் அல்ல
 என்றால் உயிரை முடிப்பேன்"
 என்று தோழியிடம் கூறினாள்.

 "இந்தச் சில வசனங்களை
 அவளுக்கு நினைவுப்படுத்து
 உடனே அவள் உள்ளம்
 மகிழ்வாள் ; இதுவும்
 ஒர் அடையாளம்” என்றான்.