பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111


அடுத்தது இந்திரசித்து ; இளைஞர் படைத்தலைவன் ; அழகன் என்று அவனைக் கூறினர் ; வீரன் ; "வில்லுப் பாட்டுப் பாடுவதில் வல்லவன்" என்ற பெயர் எடுத்தவன்.

அவன் மர்மக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தான். அதனால் மாய சாலங்கள் தெரிந்தவன் என்று அவனை விவரித்தனர்; அவன் இராவணன் மகன் என்பதை அறிந்து கொண்டான்.

அடுத்த வீடு கோலமிட்டு மெழுகி இருந்தது ; வெள்ளிக்கிழமை ஆக்கி வைத்திருந்தாள் ; நியமம் தவறாத நியதி உடையவள் ; நித்திலக் கோவை ; ஒளிவீசும் வாழ்க்கையள் ;

மண்டோதரி வீடு இவள் தனித்து உறங்கினாள் ; இராவணன் அங்குப் பகலில் மட்டும் வந்து போனான் என்பதை அவள் தனிமை காட்டியது ; அவள் மதிக்கத் தக்கவள் என்பது அவன் கருத்து.