பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


கூடும் வேளை எது ?" என்று கேள்விகள் கேட்டான்.

அவசரப்பட்டு அவன் ஆவேசப்படவில்லை ; தன் பெயருக்கு அவன் அபகீர்த்தி தேடிக் கொள்ள ஆசைப்படவில்லை.

தமிழ்ப்படங்கள் சில அவன் பார்த்திருக்கிறான் ; தலைசுக்கல் ஆக்க அம்மிக் கற்கள் அவர்கள் கையாள்வதைக் கண்டு தன் தலையை அவன் சுக்கல் நூறு ஆக்கிக் கொள்ள விரும்பவில்லை.

அவனிடம் கண்ணியம் இருந்தது ; விருப்பம் இல்லாமல் அவளைத் தொடுவது தடுப்பாகக் கொண்டு நடந்து கொண்டான்.

அவன் ஜெபம் அங்குச் சாயவில்லை ; தவணை நாள் அவனே வைத்து விட்டு நாளைக்கு என்று நாவசைத்து அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

அங்கு இருந்த சூழ்ச்சிக் காரரிடம், "அவளுக்குப் பாடம் புகட்டித் தேர்வில் வெற்றி பெறச் செய்வது