பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

117


"அவன் திருமுடியை யாரும் முடியக் கண்டது இல்லை" திருமூலரைப் போலத் தித்திக்கக் கூறினான்.

இராமன் பேரழகன் என்பதையும், தெய்வத் தன்மையன்என்பதையும் திக்குவாயால் பேசி அவளைத் திகைக்க வைத்தான் ;

"மானுடத்தின் வெற்றியை உலகுக்கு உணர்த்த வந்த தெய்வமகன்"என்று அவன் உயர்த்திப் பேசினான் ; அது அவன் மதிப்பீடு ; அது இன்றைய உலகத்தின் வழிபாடு ; போற்றத் தக்கது.

அப்பொழுதும் அவனை அவள் முழுவதும் நம்பவில்லை ; அரக்கன் இயல்பினன் யாரோ குரக்கு வடிவத்தில் வந்து தன் சரக்கை விற்கிறான்" என்று நினைத்தாள்.

"ஏடு ஏதாவது எழுதி வைத்தது காட்ட இயலுமா?' என்று அவனைக் கேட்டு வைத்தாள் ;

"ஏடு அறியேன்; எழுத்தறியேன்; காடு அறிவேன் ; காட்டில் மலையில் திரிவேன் ; மோதிரம்உண்டு"என்றுகேட்டதற்கு ஆதாரமாக அதைக் காட்டினான்.