பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

கிழிக்கப்படவில்லை ; கேடு
எதுவும் இன்றி மக்கள்
செழுமையோடு வாழ்ந்து வந்தனர்.

அந்த நாட்டில் ஒரு கொடிய சட்டம்;
யாராவது வள்ளல் என்ற சொல்லி
வார்த்தை தவறிப் பேசி விட்டால்
அ.பி.கோ சட்டப்படி அவர்களை உள்ளே தள்ளினர்;

துபாய் நாட்டின் தாக்கம் இங்கே ஏற்பட்டது;
கொடுக்கும் கரத்தை வெட்டி விட்டனர்.
அங்கு இரப்பவரும் இல்லை :
ஈந்து புரப்பவரும் இல்லை ;
உடைமை என்பது பொதுஉடைமை;
இல்லா தவர்களே அங்கு இல்லை;
அதுதான் அங்கு இன்மை எனப்பட்டது.

உழைப்புக்கு ஊதியம் பெற்றனர்;
பிழைப்புக்கு என்று கை நீட்டியது இல்லை;
கொடை என்பது முற்றிலும் தடை செய்யப்பட்டது.

சீர் மிக்க ஆட்சி

அன்று தேர்தல் அடிப்படையில்
ஆட்சிகள் அமைய வில்லை;
அதற்கு அவசியம் ஏற்பட்ட தில்லை

மக்களுக்குச் சேவை செய்வதை
விட்டுத் தம் தேவைகளை நிரப்புவது
இன்றைய அரசியல் சீர்கேடு.