பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118


பெண்ணுக்குத் தாலி ; ஆணுக்கு மோதிரம் ; முன்னதைக் கழற்ற மாட்டார்கள் ; பின்னதைப் பிரிக்க முடியும் ; இதுதான் வேறுபாடு.

மண ஒப்பந்தத்தைக் காட்டும் தீப்பந்தம் அது ; அதைவிட விளக்கம் அங்குத் தேவைப் படவில்லை.

அவள் கண்களில் மகிழ்ச்சி பொங்கியது ; குளிர் நீர் தங்கியது ;

அதை அவள் குளிப்பாட்டித் தூய்மைப் படுத்தினாள் ; "தீயவர் நாட்டுக்கு வந்தது” என்று கூறி.

அதனைப் பார்த்ததும் பழைய நினைவுகள் போர்த்திக் கொண்டு வந்து குவிந்தன.

"தாரம் தான் அல்லள் என்றாலும் அவன் தன் வீரம் காட்டுதல் வேண்டும்" என்று விரும்பினாள்.

"தாடகையைக் கொன்றான் ; பரசுராமனை வென்றான் :