பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 "மாற்றான் மனைவியைச் சிறை வைத்தாய் ; இது மாபெருங்குற்றம்' என்று அவன் மீது குற்றம் சாற்றினான்.

"சீதையை விட்டு விடு ; பிழைத்துப் போவாய் ; இல்லையேல் நீ அழிந்து சாவாய்" என்றான்.

கருப்பு அங்கிகள் அணிந்த சட்டைக் காரர்கள் குற்றவாளி யார் ? என்று கூற முடியாமல் வாய் அடங்கி இருந்தனர்.

அறத்தைக் கொள்முதல் செய்து அதை வைத்து வாணிகம் பேசும், கொள்கையன்;அறவிலை வாணிகன் வீபீடணன் வாய்திறந்தான்; "ஒற்றன் என்றால் அது குற்றம் தான் ; அவன் இங்கே வந்தவன் தூதுவன் ; அரசியல் பேசுகிறான் ; விடுதலை தக்கது" என்றான். "ஒற்றனா தூதுவனா எப்படி அவனை எடுத்துக் கொள்வது ? இவன் வானரன் ; இவன் வாலில்