பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

           132

மண்ணே கதி என்று நகர்வதில்லை;அசாம் அந்த நாட்டு கதியைப் பார்;அவதிப் படுகிறது” என்று அண்மை அரசியலை அவன் எடுத்துக் கூறினான்.

அனுமனை அபிப்பிராயம் கேட்டனர்;அவன் காரியவாதி, "நல்லவனோ,கெட்டவனோ, இது நாயகன் படத்து வினா; அது நமக்குத் தேவை இல்லை. அவனால் நமக்கு நன்மை உண்டா இல்லையா" அதுவே நம் ஆய்வு நன்மை உண்டு ; அதனால் நயப்போம் அவனை" என்றான்.

இலக்குவன் எதுவும் கூற வில்லை;ஏ.கே.நாற்பத்தேழு அதை வைத்துக் கொண்டு இராமனுக்குக் காப்பாக நின்று இருந்தான். அவ்வளவுதான்.

"படைக்கலம் போட்டு விட்டு அடைக்கலம் என்று வந்து இருக்கிறான் ; அவனுக்கு இடம் தந்து ஆதரிப்பது நம் கடமை, இலங்கை அகதிகள் எத்தனைபேர் வந்தாலும் எதிர் கொள்வது ஏற்பது நம் கடமை" என்றான் இராமன்,