பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

           136

நிராயுதனாக நின்று செய்வது அறியாது விழித்தான்.

"அடுத்த முறை எழுதலாம் இன்று போய்ப் பிறகு வா" என்று தேர்வாளர் தெரிவித்து அனுப்பினார்.

"இன்று போய்ப் போர்க்கு நாளை வா"என்று கடன் வசூலிக்க வந்தவர்களைத் திருப்பி அனுப்புவதைப் போல் இராமன் அவனை அனுப்பி வைத்தான்.

ஊரிலே இவன் பெரிய புள்ளி என்று பேர் இருந்தது; என்ன செய்வது ? இவன் கற்றது கை மண்ணளவு; தேர்வில் தோல்வி பெற்றான்; இராவணன் மனம் ஒடிந்து வீடு திரும்பினான்.

"இந்தக் காலத்துப் பிள்ளைகள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள்; திறமை சாலிகள்; அவர்கள் முன் நாம் நிற்க முடியாது’ என்பதை உணர்ந்து கொண்டான்

இராமனின் வீரத்தை மதித்தான். அடிபட்டவனுக்கு ஆறுதல் தர அவன் பாட்டன் மாலியவான் அருகிருந்து பேசினான்;