பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

          138

ஒன்றுமே விளங்க வில்லை;போர் என்பது மட்டும் தெரிந்தது.

அவன் மிகவும் நல்லவன்; "இன்னுமா அந்த சீதை இங்கே இருக்கிறாள்? நெருப்பு அவள்; அவளை இவன் இருப்பு வைத்திருக்கிறான். மடியில் கட்டிக் கொண்டு அவதிப் படுகிறான்;" அவளுக்காக இரக்கப் பட்டான்;உரக்கப் பேசினான்;குடித்தான் அவன்; போர் அதற்கு ஆள் தேடுகிறான்; அவதிக்குள்

அகப்பட்டு அல்லல் படுகிறான்; நிலைமை அவனுக்கு விளங்கியது; பிரச்சனை மிகவம் சிறியது; "அந்தப் பெண்ணை விட்டு விடு; அவள் போய்க் குடித்தனம் செய்யட்டும்; அவளை மடக்கி வைப்பது மடத்தனம்" என்றான்.

"அறிவு சொல்ல நீ அமைச்சன் அல்ல; போ சாப்பிடு உறங்கு; சாப்பாட்டு ராமன்; எதற்கும் உதவாதவன்" என்று எள்ளி உரைத்தான்.

தருக என் தேர்ப்படை; வருக படைகள் எம்முடன்"