பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143


எடுத்து எறிந்து தாக்கி எதிரிகளை ஒடவைப்பவன் ; வீண் சண்டைகளை விலைக்குப்பேசி வம்புகளை வளைத்துப் போடுபவன்;

கும்பகருணன் மறைந்தான் என்ற செய்தி கருப்பு எழுத்தில் வெளிவந்தது. கும்பகருணன் மறைந்தான் ; இனி இராவணன் ஒழிந்தான் இராமன் முன் நிற்க முடியாது” என்று நடந்துகொண்டிருந்தவர்கள் எல்லாம் நாலு வார்த்தை பேசினார்கள்.

அதிகாயனால் அடங்கி இருக்க இயலவில்லை ; இராவணன் ஆணையை அவன் கேட்கவில்லை அனுபவம் இல்லாதவன் ; ஆவேசப்பட்டான், எதிர்த்துச் சுவாசம் விட்டான்.

"பச்சை பாலகன் அவன் சிகப்பு இரத்தம் சிதற வைத்து விட்டனர்"

என்று பதறி எழுந்தான் தமையன் இந்திரசித்து,

மாயப்போர்கள் பல செய்து எதிரிகளை மடக்கியவன்இந்திரசித்து;வயதில் இளையவன்;அவனைத்தாக்குவது தரக்குறைவு என்று இராமன் இலக்குவனை அனுப்பி வைத்தான் ; இந்திரசித்து