பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

147


"இராவணன் கொடியவன்; தீயவன்; பிறர்மனை விரும்பிய பாதகன்" என்று எல்லாம் பேதைகள் பேசினர்.

மேதைகளும் இந்த விஷயத்தில் எளியவர் ஆவது இயல்பு; அது மனித ரத்தம்;

சட்டங்கள் கடுமை மிக்கவை; ஒழுக்க வரம்புகள் மதிக்கப்படுபவை; அதனால் இராவணன் நீதி தேவன் முன் நிற்கும் நிலை ஏற்பட்டு விட்டது. நீதி வென்றது; அநீதி தோற்றது.

இறுதி அவலம்

ஒருநாள் அவகாசம் தரப்பட்டது; அதற்குள் அவன் ஓராயிரம் நினைத்து இருப்பான்; அடியெடுத்து வைத்துவிட்டான்; வைப்புப் பணம் திரும்பப் பெறமுடியாது. இரண்டில் ஒன்று பார்த்து தான் ஆக வேண்டும்.