பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 13

அவனை மயக்கி இழுத்து வருவது பெரும்பாடு ஆயிற்று; கணிகைப் பெண்கள் சிலர் சென்று அவனை மயக்கிப்போட்டு ஊருக்குள் இழுத்து வந்தனர்.

நாட்டு எல்லையில் கால் வைத்தான்;அவன் வந்தபோது மழை தொடர்ந்து கொட்டியது ; இவன் வந்ததால்தான் மழை அங்குப் பெய்தது என்று ஒரு கதை கட்டி விட்டனர்.

அந்த பிரம்மசாரி பார்க்கக் கொஞ்சம்அழகாகவும் இருந்தான்; உரோம பாதன் என்ற அரசன் அவன் மகள் இவனைக் கண் கொண்டு பார்த்தாள்; அவனே தனக்குத்தேவைஎன்றுதந்தையிடம் கூற அவனை அவர் மருமகன் ஆக்கிக் கொண்டார் ; அவன் அங்குத் தங்கி இருந்தான்.

புரோகிதம் செய்ய அவனே தக்கவன் என்று வசிட்டர் சிபாரிசு செய்தார் ; உடனே தசரதன் சென்று அவனை அங்கு அழைத்து வந்து சேர்த்தான்.