பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 14

மகவு வேட்கை வேள்வி

ஒம குண்டம் அமைத்து யாக வேள்வி எழுப்பினான் ; அதில் ஆகுதி இட்டுத் தெய்வங்களுக்கு உணவு படைத்தான்.

அந்தக் குண்டுக் குழியில் எரிந்து அவிந்த சாம்பர் துகள்களை நீர் அது புனிதநீர் எனப்பட்டது ; அதில் கலந்து தெய்வச் சாயம்பூசி அது அவன் மனைவியர்க்குக் குடிக்கத் தரப்பட்டது.அது தீர்த்தம் என்று தீர்த்துச்சிறப்பிக்கப்பட்டது.

வேள்வி நடந்து முடிந்த நாட்கள் சில கழித்து அந்த மனைவியர் மூவரும் தாயர் ஆயினர் ; கருத் தரித்தனர்

சுமத்திரைக்கு இரட்டைப் பிள்ளைகள்;மற்றவர்இருவருக்கும் ஓர் ஒருபிள்ளைகள்;கோசலைக்கு இராமன்; கைகேயிக்குப் பரதன்.

மக்கள் நால்வர் தசரதனுக்கு வாய்த்தனர் வாழ்வு மலர்ந்தது.

அரச குடும்பத்தில் பிறந்தவர்கள் அதனால் கல்வி கேள்விகளில் அவர்கள் நூற்றுக்கு நூறு என்று பேசப்பட்டனர்.