பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


விடுதிகளில் விட்டு அவர்களைப் படிக்க வைக்கவில்லை; அதனால் போதை வஸ்துக்கள் அவர்கள் பழகிக் கொள்ளவில்லை ; புகை, பீடி, சிகரெட்டு அவற்றை ஆரம்பக் கல்வியாகப் பயிலவில்லை.

வில்வித்தையில் அவர்கள் பயிற்சி பெற்றனர்; அது அவர்களுக்கு வேண்டிய தொழிற் கல்வி.

விசுவாமித்திரர் வருகை

மன்னன் தசரதன் எதிர்பார்க்கவில்லை ; தாடி வைத்த சந்நியாசி விசுவாமித்திரர் அரசு அவைக்கு வந்தார் ; மன்னன் அதிர்ந்தான்.

துருவாசர் விசுவாமித்திரர் இவர்களைக் கண்டாலே அரெஸ்டு வாரண்டு கண்டு அஞ்சும் மாஜி அமைச்சர்கள் ஆயினர்;

மாறுபட்டு நடந்து விட்டால் அவர்கள் சீறிச் சபிப்பார்கள்; பிறகு முறையீடு செய்தால் ஆயுள் தண்டனையாக மாற்றுவார்கள்.

அட்லாண்டிக் விளையாட்டுப் பயிற்சியில் தங்கப்பதக்கங்களைப் பெற்றால் ஜனாதிபதி அவர்களுக்குப்