பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


பரிசுதந்து பாராட்டுதல் செய்கிறார் ; தாமிரப் பதக்கம்தான் பெற்றார்கள் என்பது செய்தி.

அழகியர் போட்டியில் அவை முதியோரைக் கவர்பவர் பேரழகி என்று பேசப்படுகிறாள் ; அவளுக்கு உலகம் சுற்றிவர ஒரு உல்லாச டிக்கட்டு அளிக்கப் படுகிறது : புதிய படம் எடுப்பவர் அவளை வைத்துக் கோடிகள் அடுக்குகின்றனர்.

இராமன்விற்பயிற்சியில்மிக்கவன் என்றபுகழ் திக்கெட்டும் பரவியது; விசுவாமித்திரனுக்கு இக்கட்டு ஏற்பட்டது. அதனால் அவனை அழைத்துச் செல்ல இந்த முனிவர் அங்கு வந்து சேர்ந்தார் ;

அமர்ந்து சிறிது நேரம் ஆகியது; 'கொக்கோ ஹார்லிக்ஸ் டீ'என்று முகமனாகக் கேட்கப்பட்டது. 'வேண்டாம் நன்றி' என்று அவர் பதில் தந்தார்.

உங்களுக்கு ஏதாவது செய்ய இயலுமா என்று வணிக இயல் பேசி அவர் வாயைத் திறக்க வைத்தான். 'மகனைத் தன்னுடன் அனுப்புக’ என்று வினயமாகக் கேட்டு வைத்தார். அனுப்புவது யோசிக்கத் தக்கது என்று யாசித்து உரை தந்தான் தசரதன். ஆவேசம் கொண்டார் தவசி; அவனைத் துவேஷித்துப் பேசி