பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17


அரச அவை விட்டு மன்றத் தலைவர்யாரும் சொல்லாமலேயே வெளிநடப்புச் செய்தார்; அவர் முனிவர், வசிஷ்டர் எழுந்தார் ; ஒழுங்குப் பிரச்சனை கொண்டு வந்து அவரை இருக்கும்படி வேண்டிக் கொண்டார். "விசா வீடு தேடி வருகிறது ; அவனவன் அமெரிக்க கவுன்சில் முன் கால்கடுக்கக் கியூவில் நிற்கிறான்; தேடி வந்த செல்வம். அதைத் தள்ளுவது மடமை ; அவருடன் செல்லுவது தகைமை” என்று அறிவுரை தந்தார்.

மறுப்புரை ஏதும் கூறாமல் முனிவர் விருப்பை ஏற்று இராமனை உடன் அனுப்பி வைத்தான் ; உடன் செல்ல இளங்கோவும் எழுந்தான் ; அவனைத் தடுக்கவில்லை. உடன் செல்ல ஒருவர் தான்தேவை;இருவர்வருகின்றனர் என்றால் பயன்பாடு உண்டு மறுப்பது நயன்பாடு அன்று என்று ஏற்று இருவரையும் ஏற்க உடன்பாடு கொண்டார்.

தாடகை வதம்

நாட்டைவிட்டு அவர்கள் வெளியே சென்றது இல்லை; கூட்டில் அடைபட்டு இருந்த பறவைகள் சிறகை விரித்துப் பறந்தன. காட்டு வாழ்க்கை அவர்களுக்கு

தெ-2