பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23


            23

வேறு வழி இல்லை அம்பு ஒன்று தொடுத்து அவள் மார்பில் பாய்ச்சினான் ; அது அங்குத் தங்க மறுத்துவிட்டது ; அது ஊடுருவி முதுகுவழி வெளிச் சென்றது.

கற்றவர்கள் தாம்;அறிவாளிகள் தாம் என்றாலும் பதவிகள் கைக்கு வந்தால் அறிவு திரிந்து கொள்ளை அடிக்கிறார்கள்; இவர்களைத் திருத்தவே முடியாது இவர்களுக்குக் கூறும் நல்லுரைகள் மனத்தில் தங்குவதுஇல்லை;அது அவர்களை விட்டு அகன்று விடுகிறது.

நெடுமரம் கீழே சாய்கிறது ; அதுபோல் அவள் படுபிணம் ஆயினாள் ; இராமனின் வில் திறத்தைக் கண்டு முனிவன் வியந்தான் ; அவள் கூவிய குரல் கேட்டு அவள் மக்கள் இருவர் சுபாகு மாரீசன் அங்கு ஒடோடி வந்தனர்; இராமன் அம்புக்கு ஆற்றாது சுபாகு இறந்தான் ; மாரீசன் உயிர் தப்பி ஓடி மறைந்தான்.

வேள்வி முடித்தல்.

அந்தக் காட்டுப் பெருவெளியில் அக்கினி வகையறா இவற்றை எழுப்பி வேள்வி தொடங்க நினைத்தான் முனிவன்.