பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

39


        கீழ்ப் பணியாளர்கள் காசு சேர்த்தால்
        அவன் அவர்களுக்கு பிடிவாரண்டு தந்தவன்;
        பொல்லாதவன் என்று பெயர் எடுத்தவன்.
        
        அவன் சீட்டுப் பெயர்கிறது என்றால்
        கோட்டு அணிந்த சிப்பந்திகள்
        அவனுக்கு 'சலியூட்டு' அடிக்கிறார்கள் ;
        பிரிவு வாசகம் படித்துப்
        பூ மாலைகள் சாத்திப்
        'போய் வா' என்று அனுப்புகிறார்கள்.
        
        புகழ் மாலைகள் போட்டுச் சிறப்பிக்கிறார்கள்.
        தசரதனை மகிழ்வோடு அனுப்பி
        வைக்க அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்தனர் :
        கண்ணிர் வரவழைக்க கிளிசரின் தடவிக் கொண்டனர்.
        
        புது ஆள் ; டைகட்டி வருபவன்
        அவன் முன் கைகட்டி நிற்க அவர்கள்
        காத்திருந்தார்கள் ; காகுத்தன்
        தக்கவன் என்று கருத்துத் தெரிவித்தனர்.
        
        இராமன் விளையாட்டு வீரன் ;
        கப்புகள் பல கொண்டு வந்து சேர்த்தவன் ;
        அவன் படங்கள் பத்திரிகைகளை நிரப்பின ;
        'இம்ரான்கான்' அவனை எதிர் நோக்கினர்,
        தாடகை பரசுராமன் இவர்களை வென்ற வீரன்.
        
        ஆட்சிகள் இப்பொழுது ஐந்தாண்டுக்கு
        ஒருமுறை மாறுகிறது ; தேர்தல்கள்
        அவர்கள் காலைவாரி விடுகின்றன ;