பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48


        அவள் உறுதி கொண்டவள் :
        அவன் இறுதிக்கு அஞ்சவில்லை ;
        அவள் அன்று இரவு
        தூக்க மருந்து இல்லாமலேயே
        அமைதியாக உறங்கினாள்.
        அவன் அமைதி இழந்து
        அலைமோதிக் கிடந்தான்.
        
        பொழுது விடிந்தது ; அவன்
        அழுது அயர்ந்தான் ;
        எழுந்து இவள் சுமந்திரனை
        அழைத்து ஆள் அனுப்பினாள்.
        
        அரசு மாளிகையில் இருந்து
        'ஜீப் வந்து நின்றது; அவன்
        தொப்பி சிவப்பு அணிந்து இருந்தான்.
        
        ஏதோ ஆணை வீடு தேடி வருகிறது;
        இராமன் சென்று ஏற்றான் ;
        அன்னை கைகேயியின் அழைப்பு.
        
        அவனை அவள் மகனாகக் கொண்டவள் ;
        நேச மகன் என்று அன்பு செலுத்தினாள்;
        
        அவள் அவனைத் தூக்கி எறிவாள்
        என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
        
        காலம் கருதிச் செய்த மாற்றம் இது ;
        அவன் அடைந்தது பெரும் ஏமாற்றம்.
        
        சுருக்கமாக அவனிடம் பேசினாள் ;
        'காடு சென்று நீ