பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66


என்று கோசலையை அறிமுகம் செய்தான்.

இராமனுக்குத் துணையாகப் பணி செய்யும் பெருமையை இலக்குவன் பெற்றான் ; அவன் தாய் சுமத்திரை என்று உறவு சுட்டிக் காட்டி விளக்கம் தந்தான் ;

கைகேயியைப் பற்றி அவன் கூறியது கடுமையாக இருந்தது ;

"கொடுமையின் இருப்பிடம்; இவள் குடலில் தான் நான் கிடந்து எழுந்தேன்.

"வெட்கப் படுகிறேன்;வேதனைப் படுகிறேன் ; இந்த இடர்களுக்கு எல்லாம் இவள்தான் காரணம் ; இவள் எந்தச் சலனமும் இல்லாத ஆழ்கடல்" என்றான்.

"இவள் உனக்குத் தாய்" என்று நாகரிகமாகக் கூறினான் குகன் ; அவளைக் கையெடுத்துக் கும்பிட்டான் ;

அவள் தவறு செய்திலள் என்பது அவன் கூப்பிய கரம் குறிப்பாக அறிவித்தது ; இராமனைச் சந்தித்து பரதன் அறிவித்த முதற்