பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69


சீர்வரிசையில் இராமன் திருக்காட்சிக்கு வந்து குவிந்தனர்.

பஞ்சவடிக்குச் செல்வது
என்று முடிவு செய்தனர்;
அடுத்த இடம் பஞ்சவடி;
சற்றுத் தெற்கே அது இருந்தது.

அங்கே இலக்குவன்
அவர்கள் தங்கிக் கொள்ள மூங்கில் குடிசை ஒன்று
கட்டிச் சமைத்தான்;

அதைப் பன்னக சாலை என்றனர்.
அதற்கு முன் வழியில் அவர்கள் அகத்தியனைச் சந்தித்தனர்; தமிழ் கற்ற சான்றோன்;அதனால் அவனை மதித்துப் போற்றினர்.

சடாயு என்ற பெயருடைய கழுகின் வேந்தனைச் சந்தித்தனர்;
அவன் தசரதனின் நண்பன்; இழவு கேட்டு அழுது முடித்தான்; ஆறுதல் கூறி அவனை விட்டு அகன்றனர்.

வஞ்சமகள் வந்தாள்

சூர்ப்பனகை அவள் பருவ
மங்கை;இராமன் உருவில் மயங்கினாள்; அவனை
அடைய அவள் ஆசை
அரும்பியது;

அழகு சாதனம்; நிறுவனம்; சேவா சாதனம் போன்றது;