பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70


அவள் அங்குச் சென்று ஒப்பனை செய்து கொண்டு அவள் கவர்ச்சி ஆயினாள்;

நாட்டியக்காரி ஒருத்தியை அந்தக் காட்டு வாழ்க்கையில் இராமனால் காண முடிந்தது; அவனுக்கு அது ஒரு மாறுதல்.

இந்த சொகுசுக்காரி இராமனிடம் சரசம் ஆடினாள்; மசமசப்பு; அதனால் பசபசத்தாள்; அது பிசுபிசுத்தது.

அவன் அவளை அசட்டை செய்தான்; காரணம் அவனுக்குத் தன் மனைவியைத் தவிர மற்றவர்கள் தங்கைமார்கள்; அது அவனுடைய கவித்துவம்.

கலியாண மாகாத கட்டை என்று அவனைக் கருதினாள்; சிகரெட்டு பற்ற வைக்க இன்று ஸ்விட்ச் வசதி இருக்கிறது; பஞ்சு என்று அவனை நினைத்தாள்;

அவனை எரிக்க முடியும் என்று வெறித்தனம் அவனிடம் காட்டினாள்; மினுக்காக அவள் சிலுசிலுத்தாள்; தளுக்காக அவளிடம் இருந்து அகன்று விட்டான்.