பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77

            77

"சரி அவன் சொன்னதைச் செய்துஅவனுக்காகச் சாவது;செஞ் சோற்றுக் கடன் என்பர் அதனை. உப்பு இட்டவன் அதனால் அவன் தப்புச் செய்தாலும் இவன் ஒப்புக் கொள்ள வேண்டியது தான். வேறு வழி இல்லை; மான்பின் இவன் சென்றான்; மானிடர் அவர்கள் என்ன செய்தார்?

பெண்கள் பிடிவாதம் பிடிப்பர்; முடக்குவாதம் அவர்களுக்கு. நகை கேட்டு அவள் நச்சரிக்கவில்லை;அது அவளுக்குச் சிறிது நேர வேடிககை; கேளிக்கை; அந்த மானைப் பிடிப்பதால் வரும் உவகை:அவன் இசைந்தான்.

தம்பி திருத்தப் பார்த்தான்: எச்சரிக்கை விடுவித்தான்: "வட்டி முப்பது சதம் என்றால் அது ஏமாற்றம்; மோசம் போக வேண்டியதுதான்;அதுவல்ல விவேகம்; பொன் நிறத்தில் ஒரு மான் இருக்கிறது என்றால் அது நமக்கு ஆகாது ; சூதுதான் ; மான்களுக்குப் புள்ளி உண்டு; அது துள்ளி' ஒடும்; இது களவு மான்' என்றான்.

காதல் என்பது அதன் காது மூக்கு இவற்றை இலக்குவன் அறியாதவன்