பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

            79

அவள் அவனைப் புரிந்து கொள்ள இயலவில்லை. அற்பத்தனமாகச் சொல்லாடினாள்; அவனை "அங்கு நிற்கதே" என்று சொற குவிததாள். வேறு வழி இல்லை.

அவன் கோடு ஒன்று கிழித்து வைத்து அதைக் கடக்க வேண்டாம் என்று கூறியதாகக் கதை.

எல்லை என்று வகுத்துவிட்டால் யாரும் அதைத் தாண்டியது இல்லை;அது மாபெரும் குற்றம் ; அதற்காக ஒர் எல்லையை வகுத்து விட்டு அவன் நீங்கினான். பிறர் இல் கடப்பது களவு ; அதனால் இராவணன் தயங்கினான்;வெளியே நின்றான்.

காவல் இல்லை ; கூர்க்கா இல்லை ; இஜட் பிரிவு துப்பாக்கி ஏந்திகள் இல்லை ;

துர்பாக்கியவதி அவளைத் தூக்கிச் செல்ல அரக்க இயல்பினன் அங்கு வந்து நின்றான்; அவன் பசுத் தோல் போர்த்து இருந்தான்.