பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

“சுக்கீரவனோடு கூட்டு
வைத்தால் சுலபமாக முடிக்க
இயலும்” என்று வழிப் போக்கன்
கவந்தன் என்பான் இவர்களோடு
கலந்து உரையாடிச் செல்லும்
வழியையும்உரைத்தான் தெளிவுபட

சபரி என்பாள் ஒரு
முதுநரை ஆட்டி
அவளும் அவனை வழிபட்டு
வழி காட்டி விட்டுப்
பின் வானுலகு அடைந்தாள்.

4 கிட் கிந்தா காண்டம்


எண்ணிப் பார்த்தான் ;
“கண்ணியது முடிக்க இந்தக்
குரங்குப் படைகள் தேவை;
சரியான யோசனை”
என்று அவனுக்குப் பட்டது.

‘சிறு துரும்பும் பல்லுக்கு
உதவும்’ ; ‘கரும்பு தின்னவும்
சிலசமயம் கூலி தேவை’
‘எதற்கும் முயற்சி இல்லாமல்

முன்னேற முடியாது’
பழமொழிகளை அடுக்கிக்
கொண்டே போகலாம் ;
‘சிற்றெலியும் சிங்கத்துக்கு உதவ முடியும்.’

ருசிய முகம் என்னும்
பருவத உச்சியில் பதுங்கிக்