பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 36

ஏவிய ஆட்களோ இவர்கள் ? என்று அஞ்சி ஒதுங்கினர்'

பார்த்தால் இவர்கள் நல்ல பிள்ளைகளாய் இருக்கின்றனர். நெற்றியில் மூன்றாவது கண் ; நெற்றிப் பொட்டு ; நேமநிட்டை; காவி நிற வேட்டி ; மடத்துச் சீடர்கள் ; பயப்படத் தேவை இல்லை. தைரியம் வந்தது.

குரங்குகளுள்ஒருபடித்தஇளைஞன் சகல கலைகளையும் கல்லாமல் கற்றவன்; பட்டி தொட்டிப் பேச்சாளி; 'சொல்லின் செல்வன்' என்றும் சிறப்பித்துச் சொல்வர்.

அனுமன்; அவன் வேகமாகத் தாவுவான்; அதனால் அவனைக் காற்றின் மைந்தன் என்று செல்லப் பெயர் வைத்திருந்தனர்,

அஞ்சனை என்பது அவன் தாயின் பெயர்; அந்தக் காலத்தில் தந்தையின் பெயர் சிலருக்குத் தெரிவது இல்லை; அவன் தன்னை அஞ்சனை மைந்தன் என்று கூறிக் கொண்டான்,

எட்டி இருந்து இந்த இருவரைப் பார்த்தான்; அவர்கள் தம்மைப் பிடிக்க