பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


சுக்கிரீவன் அவனும் ஒரு அரசன் ; இராமனும் வேந்தன் மகன் ;இருவரும் ஓர் உடன்படிக்கை செய்து

கொண்டனர் ; மனைவியரை மீட்பது அவர்கள் கூட்டுக் கோட்பாடு.

கொள்கை அடிப்படையில் கூட்டு அமைந்தது ; வாலி சுக்கீரிவனின் மூத்தவன் ; வலிமை மிக்கவன் ; இருவருக்கும் மனஸ்தாபம் ; ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர்.

குரங்குப் பிடியில் இருந்து மீட்பது என்பது அரிய செயல்;அதற்கு இராமன் உதவி தேவைப்பட்டது.

வாலியின் ஆட்சியையும் அவனைக் கொன்று இவன் கையில் ஒப்புவிக்க உடன்பாடு செய்து கொண்டான்.

இருவர் தம் உறவும் இறுகியது ; எப்படி வாலியை வெல்வது? பலபடி அவனிடம் அடிதடி நடந்து மிதியடி பட்டவன், அதனால் அவனை எதிர்க்க அஞ்சினான்; தயங்கினான் ; சின்னவன்