பக்கம்:தெய்வத் திருமகன் (கவிதை).pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92


தாக்குவோம் கவலைப்படாதே" என்று அவனை ஊக்கப்படுத்தினான்.

வாலியை அழைத்தல்

ருசிய முகத்தை விட்டுவிட்டு கிட்கிந்தை வந்து சேர்ந்தனர் ; என்றும் இல்லாத புதிய அழைப்பு வாலியின் வீட்டு முகப்பில் எழுந்தது.

"வாடா வெளியே !" டா போட்டுப் பேசினான்; "ஒரு கை பார்த்து விடலாம்" என்று இருகை தட்டி அவனைக் கூவி அழைத்தான் சுக்கிரீவன்.

கோதாவில் இரண்டு தாதாக்களும் சந்தித்தனர் ; தாரை வாலியின் மனைவி தடுத்துப் பார்த்தாள்.

கட்ட பொம்மன் மனைவியாக அவள் அன்று வசனம்பேசினாள். அவன் அதைப் பொருட்படுத்த வில்லை.

வட்டம் வரைந்து அதற்குள் இருவரும் முட்டிக் கொண்டனர் ; ஒருவரை ஒருவர் தூக்கிப் போட்டுப் பந்தாடினர் ; குட்டிக் கரணம் போட்டுப் பழகியவர்கள்;அதனால் ஒருவரை ஒருவர் உருட்டி எடுத்தனர் ;