பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 பெருமான் புன் முறுவலுடன் ஆடிக் கொண் டே உருத்திர தாண்டவத்தில் இறங்கு கிருர். அப்போதும் பராசக்தி சளேக்காது அதற்கேற்ருற்போல் ஆடுகிருள். தேவர் களெல்லால் அதிசயம் கொள்கின்றனர். அடிக்கடி கை கொட்டி ஆர்ப்பரிக்கின்ற னர். கடைசியாக, நடராஜப் பெருமான் வலது காலே மேல் தூக்கிக் காதில் அணிந்: திருக்கும் குண்டலத்தைக் கால் பெருவிர லால் தொடும்படியாக ஊர்த்துவ தாண்ட வம் ஆடுகிறர். இதைக் கண்டு பராசக்தி பிரமித்துப் போகிருள். ஆணப் போல் பெண் அவ்விதம் ஆடமுடியாத நிலையை உணர்ந்து அவள் அவமான உணர்ச்சி யோடு தலே குனிந்தவாறு ஆட்டத்தை நிறுத்துகிருள். ஊர்த்துவ தாண்டவ வேகத்தில் கால் பெரு விரல் உந்துதலால் நடராஜப் பெருமானின் செவியில் இருந்த குண்டலம் எகிறிப்போய் எங்கோ விழு கிறது. இது கண்டு தேவர்கள் ஆர்ப்பாட் டம் செய்கின்றனர்.) கா : பார்த்தீர்களா! எங்கள் அம்பலவாணரின் ஊர்த்துவ தாண்டவத்தை? தே1 : தேவி அயர்ந்து போய் நிற்பதிலிருந்தே தெரிகிறதே? (சிலர் மகர குண்டலத்தைத் தேடுகின்றனர்.) தே 2 : பெருமானே! உங்கள் செவியில் இருந்து தவறி விழுந்த குழையைக் காணுேமே? கட : புன் முறுவலோடு) நீங்கள் எங்கு தேடினுலும் எவ் வளவு நேரம் தேடினலும் உங்களால் அதைக் கண்டு பிடிக்க முடியாது.