பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

101 மாறு கூறப்பட்டிருக்கிறது. இதை வைத்து இருபாலாருக் கும் வேறுபாடு கற்பிப்பதா? வா : உங்கள் அறிவுரை எனக்கு எப்போதும் நினைவில் இருக் கிறது. ஆல்ை என் அன்னயார் சொல்லியிருக்கிருர்: தனக்குக் கணவராக வருபவரைக் கண்ணுங் கருத்துமாகப் காத்துப் பேணுவதற்கென்றே படைக்கப்பட்டவள் பெண் என்று. அதன்படித்தான் நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன். வள் : வழி வழியாக இரத்தத்தில் ஊறிப்போயுள்ள சில பண்பு களேப் பெண்களிடமிருந்து அவ்வளவு எளிதில் மாற்ற: முடியாது. சரி; சரி. இப்போது உன் சொல்லுக்குக் கட் டுப்படுவதைத் தவிர, எனக்கு வேருென்றும் தோன்ற வில்லை. இந்த ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்து வை. நாம் உறங்கப் போகலாம். (வாசுகி ஏட்டையும் எழுத்தாணியையும் எடுத்துக்கொண்டு உள்ளே போகிருள். வள்ளுவர் படுக்கையில் போய்ச் சாய்கிருர்: சிறிது நேரத்தில் வாசுகி விசிறியுடன் வந்து அவர் பக்கத்தில் அமர்ந்து அவருக்கு விசிறி யால் விசிறுகிருள். அடுத்து அவள் வாய் எதையோ மெல்லப் பாடுகிறது. பாடலேக் கேட்டவாறே வள்ளுவர் கண் உறங்குகிருர், அவர் நன்ருகத் தூங்கிவிட்டார் என்று தெரிந்தபின், வாசுகி அவருடைய பாதங். களைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக்கொண்டு. பின் தான் படுத்துக் கொள்கிருள்.) (இதே சமயத்தில் கிள்ளுவன் தின் வீட்டில் மனேவியுடன் பேசிக்கொண்டிருக்கிருன்.). யூத பக்கத்து வீட்டில் காலட்சேபம் ஆரம்பிச்சிட்டுது, மச் - சான்? நாம தூங்கிளுப்போலத்தான்.