பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ஏலே : எல்லாவற்றையும் நேரில் பார்த்தது போலல்லவா சொல்லுகிறீர்கள்? ஐயா! ஒருவருடைய உள்ளத்தை ஊடுருவிப் பார்த்து விஷயத்தை ஊகித்துக் கொள்ளும் மதியூகம் மட்டுமல்லாமல், எங்கு என்ன நடக்கிறது என்ற தொலை நோக்கு உணர்வும் உங்களுக்கு இருக்கு என்பதை நான் அறிந்து கொண்டேன். நீங்கள் தேவர்களைக் காட் டிலும் பெரிய தேவர். (அவர் உடம்பெல்லாம் நடு நடுங்கு கிறது. வள்ளுவருடைய காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குகிருர்.) என்னே மன்னித்துக் கொள்ளுங் கள், ஐயா. வள் : நீங்கள் என்ன பிழை செய்து விட்டீர்கள்? ஏலேல. சிங்கரே மன்னிப்பு கேட்பதற்கு, ஒரு காரியத்தில் ஈடுபட் டால் மனிதர்கள் அதில் முழுவதும் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியம். அதிலும் வாணிபத்தில் அதிக அக்கரையும் கவனமும் இருக்க வேண்டும். ஆனல் சிவபூஜை செய்யும் சமயத்தில் கூட அதைப்பற்றிச் சிந் தனைசெய்ய வேண்டா மென்றுதான் சுட்டிக்காட்டினேன். ஏலே : நான் உங்களே என் வாழ்க்கைக்கு வழிகாட்டும் ஆசாரியனுகவே மதித்திருக்கிறேன். ஐயா! நான் ஏதே னும் பிழை புரிந்தால் அதைக் கண்டித்துப் புத்தி கூற வேண்டும். - வள் வாழ்க்கைக்குப் பொருள் மிக அவசியம். திரை கட லோடியும் திரவியம் தேடத்தான் வேண்டும். ஆனால், அதற்காகப் பொருளிலேயே புத்தியை முழுவதும் பதித்துக் கொள்ளக் கூடாது. புளியம் பழம்போல் ஒட்டி யும் ஒட்டாமலும் இருக்க வேண்டும். ஒன்றின் மீது மிகுந்த பற்றும் பாசமும் வைத்து விட்டால் அதனல் துன்பமும் துயரமும்தான் மிகுதியாகும். ஏலே : நல்ல அறிவுரை இது; ஐயா! இனிமேல் பொருளையே பெரிதாகக் கருதி அதில் ஆசை வைக்கமாட்டேன்.