பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135 பறி கொடுத்திட்டேன். இரவும் பகலும் உன் நினைவே என்ன வாட்டி வதைச்சிக்கிட்டு இருக்கு. நீ தண்ணிர் மொண்டு வர குளத்துக்குப் போகிற போதும் வருகிற போதும், சாமி கும்பிடக் கோயிலுக்குப் போய் வருகிற போதும் பைத்தியக்காரன் போல அல்லவா உன் இனப் பின் தொடர்ந்துகிட்டு இருக்கிறேன். உன்னத் தனியா சந்திச்சு என் ஆசையைத் தெரிவிக்கலாமின்ன நீ தனியா வர்றதே இல்லையே? உன்ைேடு சதா பொம்மனுட்டிங்க நாலுபேர் வந்துகிட்டே இருக்காங்க. பெ : உன்னைப்போல கயவாலிப் பயல்கள் யாரானும் வம்பு தும்பு பண்ணப் போருங்கன்னுதான் நாங்க எங்கே போனலும் கும்பலாப் போருேம்; வாருேம். கக் : அப்படியெல்லாம் சொல்லாதே; பெருந்தேவி! நான் சில துக்கிரிகளைப்போல கண்ட கண்ட பொண்ணுங்களேயெல் லாம் பார்த்துப் பல்லே இளிக்கிறவன் இல்லே. முன்பிறவி, தொடர்போ என்னமோ உன்னைப் பார்த்துத்தான் என் மனம் பித்துப் பிடித்துப் போயிருக்கு. பெ.: என்னய்யா வாய்க்கு வாய் பெருந்தேவி, பெருந் தேவின்னு கூப்பிட்டுக்கிட்டு. தாலி கட்டினவர்கூட அப் படிக் கூப்பிடறதில்லே பேரிட்டு. நீ என் பேரைக்கூடல்ல தெரிஞ்சு வைச்சிருக்கே? நீ எங்கிருக்கிறவன்னு தெரிய 8:0{3ւա? கக் எல்லாம் உங்க வீட்டுப்பக்கத்திலே இருக்கிறவன்தான்; ·ኣ இப்ப உன் பக்கத்துலே இருக்கிறது மாதிரி. (அவளே நெருங்கி நிற்கிறன்.) பெ: (கோபத்துடன்) என்னய்யா! நெருங்கி நெருங்கி வர்றே உடனே இந்த இடத்தை விட்டுப் போறையா? இல்லை; விளக்குமாத்துப் பூசை வேணுமா? - (ஏதோ எடுக்கத் தடவுவது போலச் சத்தம் கேட்கிறது.)