பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 வள் : சே! சே! அதெல்லாம் இல்லை. நோயாயிருக்கையில் உற்ருர் உறவினரைப் பார்க்கணும் என்ற தாபம் இருப்பது மனித இயற்கை. அதல்ை சொன்னேன். வா.: (உறுதியான குரலோடு) உங்களுடைய அன்பும் அர வணப்பும் அருமைத்துணேயும் இருக்கும் வரை நான் வேறு யாரையும் பார்த்து ஆறுதல் பெற வேண்டிய அவ. சியமில்லை. வள் : வாசுகி! நீ அதிகம் பேசி உடம்பை அலட்டிக் கொள் ளாதே. வா : நீங்கள் பயப்படாதீர்கள். நான் உங்களை விட்டுச் சீக்கிரம் போய்விட மாட்டேன். வள் : நீ என்ன பேசுகிருய்? வாசுகி! வா : நான் உள்ளதைத்தான் சொல்லுகிறேன்; நாதா எனக்கு எப்போதோ முடிவு வந்து விட்டது என்று. தெரியும். உங்களுடைய உண்மையான அன்புதான் என் உயிரைப் பிடித்து நிறுத்தி வைத்திருக்கிறது. வன் : (உருக்கமாக) வாசுகி உன் அன்புக்கு அடைக்குத் தாழே கிடையாது என்பதை நான் நன்கு அறிவேன். நான் இந்தப் பரந்த உலகில் ஒரு மனிதனுக உலாவுகி றேன் என்ருல், பெற்றவளே விட என்னைப் பல வகையிலும் பேணி வளர்க்கும் உன்னுடைய தயா உள்ளந்தான் காரணமாகும். அப்படிப்பட்ட உன்னே நான் எப்படிப் பிரிந் திருப்பேன்? பிரிந்து வாழ முடியும்? வா. நீங்கள் எல்லாம் உணர்ந்தவர்கள். இவ்வுலகில் பிறந்த வர்கள் எப்பேர்ப்பட்டவர்களாயிருந்தாலும், என்ருயினும் ஒரு நாள் மரண மடைவது தவிர்க்க முடியாதது; இது இயற்கை என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். என் பிரிவு குறித்து நீங்கள் இவ்வளவு கவலைப்படலாமா?நாதாt