பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 வன : நான் புகழ்ந்துரைத்து என்ன பயன்? நாதா! உண்மை யில் இதைச் சீர்தூக்கிப் பார்த்துப் பாராட்டிப் புகழ வேண் டியவர்களுடைய கவனத்துக்கு உங்களுடைய ஒப்பற்ற நூலான திருக்குறள் போகவில்லையே? வன் : ஊம். வன : நான் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன்; ஏலேலசிங்கரும் இவ்வூர் அறிஞர்களும் உங்களை வற்புறுத்திக் கொண்டிருக்கிருர்கள்; இறையனர் தலமை வகிக்கும் மதுரைத் தமிழ்ச்சங்கத்துக்கு இந்நூலேஎடுத்துக் கொண்டு போய் அரங்கேற்றி விட்டு வாருங்கள் என்று. என்ன காரணமோ! நீங்கள் ஆகட்டும்; பார்க்கலாம்? என்று காலம் கடத்திக் கொண்டு வருகிறீர்கள். வள் : நீண்ட நேரம் பேசியதல்ை உனக்கு மூச்சுத் திணறு கிறது; பார், வாசுகி! அமைதியாயிரு. நான் போய்க் கஞ்சி கொண்டு வருகிறேன். ஒரு வாய் பருகி அயர்ச்சி நீங்கு. வா : (கையமர்த்தி) எனக்கு இப்போது ஒன்றுமே வேண்டி யிருக்கவில்லை; நாதா இருங்கள்; என் இறுதி வேண்டு கோளை அமைதியாய்க் கேளுங்கள். நீங்கள் கூடிய சீக்கிரம் திருக்குறளை எடுத்துக் கொண்டு போய் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேற்றி விட்டு வருவேன் என்று எனக்கு வாக்குறுதி அளியுங்கள். நான் நிம்மதியாக உயிர் விடுவேன். - வன் : இப்படியெல்லாம் சொல்லலாமா? வாசுகி! எனக்கும் மதுரைத் தமிழ் சங்கத்திற்குப் போக வேண்டும்; சங்கத் தலைவரான இறையனரையும் மற்றப் புலவர் பெருமக் களையும் பார்க்க வேண்டும்; அவர்களிடம் திருக்குறளைப் படித்துக் காட்டி அரங்கேற்றம் செய்யவேண்டும் என்ற ஆசைதான். அதற்கான சந்தர்ப்பத்தைத்தான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், இது ஏன் உன்னுடைய இறுதி வேண்டுகோளாக இருக்க வேண்டும்?