பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#56 இறை : திருவள்ளுவரே! உம்முடைய ஒவ்வொரு குறளும் தமிழ்த் தெய்வத்தின் திருவடிகளில் அர்ச்சிக்கத்தக்க பொன்மலர்கள். செந்தமிழ்க் கற்பகத்தின் தேன் பிலிற் தும் தெய்வத் திருமலர். - டிக் : நான்மறையின் மெய்ப்பொருளே முப் பொருளாக உரைத்த நீர் பிரம்ம தேவரே! உமக்கு சென்னி தாழ்த்து கிறேன். கபி : உம்முடைய குறளில் உலகமுழுதையுமே காட்டிவிட்டீர்! ஐயா! பர : திருமால் வாமனராய் வந்து உலகை ஈரடியால் அளந் தது போல், வள்ளுவரே! நீர் குறள் வெண்பாவால் மக்கள் உள்ளத்தை முழுதும் அளந்து விட்டீர். - மாமூலஞர் : அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கின் திறந்தெரிந்து செப்பிய தேவர் நீர்! அரிசில் கிழார் பரந்த பொருளையெல்லாம் பாரறிய சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லும் உம் முடைய ஆற்றலே வேறு யாரிடமும் இதுவரை நான் காணவில்கில், வெள்ளிவீதியார் : செய்ய மொழிக்கும் வள்ளுவரே! நீர் மொழிந்த பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றுதான் என்று தெரிந்து கொண்டோம். மாங்குடி மருதளுர் : ஒதற்கு எளியதாய் உணர்தற்கு அரிதாகி வேதப் பொருளாய் மிக விளங்கி உள்ளுதொறும் உள்ளு தொறும் உம்முடைய வாய்மொழி எங்கள் உள்ளத்தை உருக்குகின்றது, ஐயா! தமிழ்நாகனர் : எல்லாப் பொருளுமே குறள் பாவில் இருக் கின்றன. இதன் பால் இல்லாத எப்பொருளும் இல்லே . களத்துர்கிழார் : வள்ளுவர் குறளே ஒதிவிட்டால் அருமறை கள் ஐந்தையும், சமய நூல் ஆறையும் கூடப் படித்தறிய வேண்டியதில்லை என்பது என் கருத்து.