பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 நாடகத்தை எழுதுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுவிட்டேன். ஆராய்ச்சி நூல்கள் பலவற்றை ஆராய்ந்து பார்த்து விட்டு நாடகத்துக்கு ஒர் உருக் கொடுத்து எழுதி முடிப்பதற்கு நாகலந்து மாதமாய் விட்டது. அதற்குள் இராச நாயகம் வழக் கம் போல் வாழ்க்கைச் சோதனைக்குள்ளாய் விட்டார் என்று நண்பர் ரா.வே., கவிஞர் தேவிதாசன் ஆகியோர் மூ ல ம் அறிந்தேன். அவர் நேரில் என்னைப் பார்க்கக்கூசிக் கடிதங்கள் வாயிலாக நம்பிக்கை யூட்டிக் கொண்டிருந்தார். ‘நண்பர் நடத்தும் போது நடத்தட்டும். எழுதியதை நூல்வடிவில் கொண்டு வந்து விடுங்கள்’ என நண்பர் எஸ். டி. எஸ். யோசனை கூறினர். அதன்படி தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் பொருள் உதவியைப் பெற்று இந்நாட கத்தை நூல் வடிவில் கொண்டு வந்திருக்கிறேன். இவ் வகையில் மேற்படி சங்கத்தின் செயலாளர் சுந்தரம் அவர் களுக்கும் பிற உறுப்பினர்களுக்கும் என் நன்றியை இச்சமயத் தில் தவருமல் தெரிவித்துக் கொள்ளவேண்டும். முக்கியமாக, தமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் மு. கரு ைநிதி அவர்களுக்கு நான் மிகவும் நன்றி தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன் என் நாடகத்தைப் படித்துப்பார்த்து உங்கள் மேலான கருத்தைத் தெரிவிக்க வேண்டு மென்று கேட்டுக் கொண்டதும் கலைஞர் அவர்கள் தம்முடைய பல அவசர அரசாங்க அலுவல்களுக்கிடையே என் நூல் முற்றும் படித்து முடித்துச் சிறப்புரை எழுதியுதவியதை எம்மொழி யால் பாராட்டுவேன்? கலைஞரவர்களைப் போலவே என் நாடகத்தை ஊன்றிப் படித்து தங்களுடைய கருத்துக்களை வழங்கியுள்ள வா கீ ச கலாநிதி கி. வா. ஜகந்நாதன் அவர்களுக்கும் முத்தமிழ்க்கலை வித்தகர் தி.க. சண்முகம் அவர்களுக்கும் என் நன்றி உரிய தாக. அருள் ம்ொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார், கலைமாமணி கவிஞர் எஸ். டி. சுந்தரம் ஆகியவர்கள் என்னை