பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கோ : இதேதுங்க குழந்தை! யாருது? உங்க கையிலே... வே . அதுதான் சொன்னேனே ஆண்டவன் அளித்ததுன்னு. நம்ப பிள்ளைக் கலியைத் தீர்க்க வந்த பேராளன் இவன். கோ : ஆண் குழந்தைங்களா இது? எங்கே கிடைச்சது? யார் கொடுத்தது? வே : மாந்தோப்புப் பக்கம் போனேன? நம் கழனியைப் பார்க்க. ஒரு இலுப்ப மரத்தடியிலே இந்தக் குழந்தை அழுதுகிட்டு இருந்தது. அதைச் சேர்ந்தவங்க யாரையும் காளுேம், ரொம்ப காலமா நமக்குப் பிள்ளேப் பேறே இல் லியேன்னு ஏங்கிக்கிட்டிருக்கோம் இல்லேயா? கடவுளாகப் பார்த்துக் கொடுத்திருக்காருன்னு எண்ணித்தான் நான் இதை எடுத்து வந்தேன். . . . . கோ : அப்பிடியா? நாம நோற்று வந்த நோன்பு வீண் போகல்லேன்னு சொல்லுங்க. {ஆவலாக) எங்கே? குழந் தையை இப்பிடிக் கொடுங்க. (கை நீட்டி ஆர்வத்துடன் வாங்கிக் கொன்கிருள்.) ஆ! இது கொள்ளே அழகோடு அல்ல இருக்கு. (குழந்தை அழுகிறது.) - வே சரி! சரி குழந்தைக்குப் பசி போலிருக்கு. முதலில் பால் கொடு இதுக்கு 3. கோ : குழந்தையைத் துரக்கினதுமே எனக்குப் பால் சுரந் துட்டுதுங்க. நான் கொடுத்துப் பசியாற்றுகிறேன். உங்க அலுவல்க் கவனியுங்க, போங்க. குழந்தையை எடுத்துக் கொண்டு உள்ளே பேசுகிருள். வேளாளன் வெளியே செல் கிருன்.)