பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 இச்சமயம் அரண்மனை பூந்தோட்ட வழி: யாக வந்து கொண்டிருந்த வள்ளுவர் அடுத்துள்ள அந்தப்புரப் பூஞ்சோலையில் தன்னைப்பற்றி யாரோ பேசுவதைக் கேட்டு வியப்புற்று வேலியோரமாகப் போய்க் கவனிக்கிருர் வாசுகிதான் தோழியிடம் தன்னைப் பற்றி வருணித்துக் கொண்டிருக். கிருள் என்று அறிந்ததும், மனமகிழ்ந்து மேலும் அவளுடைய பேச்சைக் கேட்டு: இன்புறுவதற்காகத் தான் இருப்பதை மற்ற வர்கள் அறிந்து கொள்ளாதபடி, பூம்புதர் பக்கத்தில் நின்று ஒற்றுக்கேட்கிறர்.) வன் : (தனக்குள் மெல்ல) நான்தான் வாசுகியைப் பார்த்துப். பித்துப்பிடித்துப் போயிருக்கிறேன் என்று எண்ணினேன். பெரிய இடத்தில் என் புத்தி போகலாமா என்று யோசித். துக் கொண்டிருக்கிறேன். ஆல்ை, தலைமை அமைச்சர் மகளும் என்மீது ஆசை கொண்டிருக்கிருள் என்றல்லவா இப்போது தெரிகிறது? நான் பெரும் பேறு பெற்றவன் தான். எங்கள் காதல் நிறைவேறுமா? பார்ப்போம். ஆண்டவன் திருவருள் கூட்டி வைத்தால் நடக்காததும் உண்டோ! - வா: பூங்குழலி! உன்னிடம் சொல்வதற்கு என்ன? முதன் முதலாக நான் அவரைப் பார்த்தேனே! அப்போதே. அவருடைய கம்பீரத் தோற்றம் என் நெஞ்சில் நிறைந்து, விட்டதடி போதிய உயரம் இல்லாவிட்டாலும் அகன்றமார்பும் திரண்ட தோள்களும் அவருடைய உருவத்தை எடுப்பாக எடுத்துக் காட்டுகின்றன. அகன்ற நெற்றி; ஆழ்ந்த கூரிய கண்கள்; எடுப்பான மூக்கு; அழகாக. வகாந்த மோவாய், மீசை முறுக்கேறிய தடித்த உதடுகள் என் கண்மணிகளில் எப்போதும் நிழலாடிக் கொண்டிருக் கின்றன. கனவிலும் நனவிலும் முறுவல் தவழும் அவ.