பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49 தோட்டத்தை. அவரும் உங்கள் உரையாடலே இதுவரை கேட்டுக் கொண்டுதான் இருந்தார். நான் இப்போது பேசுவதையும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிருர், |வாசுகியும் தோழியும் ஏக காலத்தில் ஆ! எனக் கூவி வியப்படைகின்றனர். அவர் களுடைய கண்கள் வள்ளுவர் நிற்கும் இடத் தைத் தேடிப் பார்க்கின்றன. தலைமை அமைச்சர் குரல் கேட்டதுமே அவசரமாக அவ்விடத்தை விட்டு அகல முயன்ற வள்ளு ... " வர் காலெழாமல் அப்படியே நிற்கிருர். தலை : (வள்ளுவர் இருக்கும் பக்கம் நோக்கி) இராயசேகரரே! நான் சொல்வதைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டுவ தில்லே.-பெண்கள் இருக்கும் பக்கமே திரும்பிப் பார்க்காத பேராண்மையும் பெருங்குணமும் இயற்கையாக உடைய வள்ளுவர். நீங்கள் இருக்கும் இடத்தை நாடி வருவதும் உங்கள்உரையாடலேக்கேட்பதும் என்ருல் அவருக்குவாசுகி யின்பால் நாட்டம் உண்டாயிருக்கிறது; அன்பு ஏற்பட்டு இருக்கிறது என்றுதானே பொருள்? இதற்குள் வள்ளுவர் சுதாரித்துக் கொண்டு . . அவ்விடத்தைவிட்டு.விரைந்து செல்கிருர்.} தலை : (நகைத்துக்கொண்டு) வள்ளுவருக்கு வெட்கம் வந்து விட்டது. அதுதான் விரைந்து போகிருர். வாசுகி! நீ மிக வும் தவம் செய்தவள். உனக்கு நல்ல கணவன் கிடைத்து விட்டான். நீ மகிழ்ச்சியாயிரு.எல்லாம் நல்லபடி நடக்கும். நான் அரசரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு விரைவில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். வா.: (நாணத்துடன்) நீங்கள் நல்ல அப்பா! உங்களுக்கு மகளாகப் பிறந்தது நான் பேற்ற பெரும் பேறு. ‘. . . - (அவர் காலில் விழுந்து வணங்குகிருள். இச் . . . . . சமயம் தோழி மெல்ல நழுவி விடுகிருள்.) தலை: தீர்க்க சுமங்கலியாயிரு; அம்மா!