பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5i (எழுந்து வாசுகியிடம் சென்று அவளது கரத்தைப் பற்றி அழைத்து வந்து தன்னு: டன் உட்கார வைக்க முயல்கிருர். அவர் தன்னைத் தொட்டதுமே மெய் விதிர்த்த வாசுகி பஞ்சணே அருகே சென்றதுமே அவரது பாதங்களில் விழுந்து வணங்கு. கிருள்.) வள் : (புன்னகை செய்து) உன்னுடைய நாணமும் புன் னகையும் என்ன அடியோடு உனக்கு அடிமையாக்கி விட்டன. போர்க்களத்திலே எப்பேர்ப்பட்ட பகைவர் களுக்கும் தோற்காத நான் உன்னுடைய ஒளிபொருந்திய முகத்தைக் கண்டு முன்னமே பணிந்து போய் விட்டேன். அது போதாது என்று......... வா: நாதா! நீங்கள் இப்படியெல்லாம் என்னேப் புகழலாமா? வெட்கத்தால் என்னே ஒரேயடியாக ஒடுங்க வைத்து விடு. கிறீர்களே! வன்: நான் மிகைப்படுத்தி ஒன்றும் சொல்லவில்லையே! வாசுகி! யாருக்குந் தலை வணங்காது சுதந்திரமாக இருந்த என்னை எப்படி நீ உன் வசப்படுத்தி விட்டாய் என்பதைத் தான் நான் விவரிக்கிறேன். இதில் வெட்கப்படுவதற்கு என்ன இருக்கிறது? பெருமைப் படுவதைத் தவிர, நீ தொண்டை மண்டலப் பேரரசை ஆட்டிப் படைக்கும் தலைமை அமைச்சரின் அருந்தவச் செல்வி. நானே ஒரு சாதாரண வீரன். தென்துருவமும் வடதுருவமும் ஒன்று. சேர்ந்த தென்ருல் கூட அவ்வளவு ஆச்சரியப்படுவதற். கில்லை. நாம் ஒன்று பட்டது வியப்பே! வா.: மாமன்னனின் மகளானலும் மாலையிட்டவனுக்கு மண்டி விட்டுத்தானே ஆக வேண்டும்? - வன் : இவ்விதமான நிலை ஏற்பட்டதற்காக நீ வருத்தப்படு கிருயா? வாசுகி! - -