பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 வா : ஐயையோ நான் அப்படிச் சொல்லவில்லையே! பெண் களாய் பிறந்தவர்கள் எப்பேர்ப்பட்ட நிலயில் இருந் தாலும், கட்டிய கணவனுக்குக் கை கட்டி நின்று குற். றேவல் செய்ய வேண்டியது தலயாய கடமை என்றே சொல்ல வந்தேன். நீங்கள் அதை விபரீதமாகப் பொருள் வள் : (நகைத்து அதிருக்கட்டும், வாசுகி இப்போது இவ்வளவு பணிந்து பேசுகிருயே? திருமணத்துக்கு முன் எவ்வளவு மிடுக்காக இருந்தாய்? என்னைக் கண்டால் எப் படி எப்படி யெல்லாம் நடந்து கொண்டாய்? வா: வெட்கத்தோடு எப்படி நடந்து கொண்டேன் வன் : உன் கடைக்கண் நோக்கு என் மீது விழாதா என்று. நான் எவ்வளவு நாட்களாக ஏங்கிக் கொண்டிருந்தேன், தெரியுமா? அந்தச் சமயங்களில் நீ என்னைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாய். கால் சலங்கை கலீர் கலீரென ஒலிக்கக் கம்பீரமாக நடந்து செல்வாய். அது என் நெஞ் சத்தடத்தின் மீது நடப்பது போல் இருக்கும். ‘. வா : (நாணப் புன்னகையுடன்) என்னதான் தன் உள்ளத் தைக் கவர்ந்தவராயிருந்தாலும், எவ்வளவுதான் தனக்கு ஆசை இருந்தாலும் திருமணத்துக்கு முன் எந்தப் பெண் தான்? நாணத்தை விட்டு ஆடவைெருவனப் பார்த்துப் பேசுவாள் அதுவும் பலர் முன்னுல்? எல்லாம் தெரிந்திருத் தும், நீங்கள் என் மீது குற்றஞ் சாட்டுகிறீர்களே! . வன்: நான் பார்க்கும் போது உன் முகத்தைத் திருப்பிக் - கொள்வதும், தலைகுனிந்து கொண்டு கால் விரலால் நிலத் தைத் கீறியவாறு தரையை நோக்குவதுமாயிருக்கும் தீ நான் பார்க்காத சமயத்தில் மட்டும் என்னைப் பார்த்து மெல்லச் சிரிக்கலாமா? உன்னுடைய இந்தக் கள்ளப் பார்வை என்னை எவ்வளவு வேதனைப் படுத்திவிட்டது; தெரியுமா? . - .