பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 வா : ஏன்? வேறு யாரும் இல்லேயா அரசருடன் போக? திரு. மணமாகிச் சரியாகப் பத்து நாட்கள்கூட ஆகவில்லை. நீங்கள்தான் அகப்பட்டீர்களா? வேறு யாருக்கு இல்லாவிட்டாலும் அரசருக்கு யோசனே இருக்க வேண் டாம்? தலேமையமைச்சருக்குப் புத்தி எங்கே போச்சு? வள் தேவிக்கு என்ன இவ்வளவு கோபம் எல்லோர் மீதும்? தந்தையைக்கூட அயலார் போலக் கண்டிக்க முற்பட்டு விட்டாயே! வா : நீங்கள் எல்லாருஞ் சேர்ந்து செய்துள்ள அசட்டுக் காரி யத்துக்குக் கோபப்படாமல் கொஞ்சனும் போல, வள் : கடமை என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டாயே நீ? வாசுகி1 வா : இந்த ஆண்கள் செய்கிற தப்பிலித்தனங்களை மறைத்துத் தப்பித்துக்கொள்ள உதவுவதற்கு ஒரு நல்ல வார்த்தை கிடைத்திருக்கு, கடமையென்று. மனைவி மக்களுக்குச் செய்யவேண்டிய கடமைகள் நீங்கள் சொல்கிற கடமை. யில் சேர்த்தியில்லையே! - வா வீட்டுக் கடமைக்கும் நாட்டுக் கடமைக்கும் நிரம்ப வித்தியாசம் இருக்கிறது வாசுகி, எல்லாம் ஒரே கடமை யாய் விடமுடியுமா? வன : என்ன கடமையோ? போங்கள். என்னேக் கரம் பிடித்த போது, உன்னைப் பிரியேன்; பிரிந்தால் ஆற்றமாட்டேன்’ என்று சொல்லி அஞ்சல் அளித்த நீங்களே அடியோடு மறந்து இப்படிப் பேசில்ை நான் எங்கே புகல் போவது? வள் : வாசுகி! நான் சொல்வதைக் கேள். இது பிரிவேயில்லை. இரண்டே நாள்தான். போன காரியம் முடிந்தவுடனே சிறிதுந் தாமதியாமல் திரும்பிவிடுவோம். வா: பிரிந்து போகிற ஆடவர்கள் மனைவிமாரிடம் விடை பெறுகிறபோது இப்படித்தான் சொல்வார்கள் என்று பிற பெண்கள் சொல் லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதுபோல........