பக்கம்:தெய்வப்புலவர் திருவள்ளுவர்-நாடகம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஏலேலசிங்கர் கடலில் இட்ட பொற்கட்டி மீண்டும் அவரை அடைந்தது என்பதும், வாசுகி கொங்கணவரின் செருக்கை அடக்கினர் என்பதும், வாசுகி கிணற்றில் பாதி இழுத்த குடத் தையும் கயிற்றையும் அப்படியே விட்டு வர அவை அப்படியே நின்றிருந்தன என்பதும், வள்ளுவர் வேட்டியைக் கிழித்தவ னுக்குத் தண்டனை கொடுத்து அறிவு வரச்செய்தார் என்பதும், அவர் உண்னும் போது ஊசியையும் நீரையும் அருகில் வைத், துக் கொண்டு உண்டார் என்பதும், திருக்குறளே சங்கப்பலகை ஏற்றுக்கொண்டது என்பதும் ஆக வழங்கிவரும் கதைகளைத் தழுவி அமைத்துக் கொண்ட பகுதிகள், திருவொற்றியூரில் யாகத்தை நிறுத்தியது நக்கண்ணனைத்திருத்தியது என்பவை திருக்குறள் கருத்தைத் தழுவி அமைத்த காட்சிகன் திரு வள்ளுவரும் வாக்கியும் மனம் ஒன்றிய காதலில் ஈடுபடும் காட்சியில் திருக்குறட் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளன. திருவள்ளுவர், தொண்டைமான் இனத்திரையனிடம் உள்படு கருமத்தல்வராக இருந்து பிறகு அரசியல் வெறுத்து நெய்தல் தொழில் மேற்கொண்டதாக அமைத்துள்ள கற்பனை சுவைக்கத்தக்கது. கிள்ளுவன், பூதகி என்ற இரண்டு பாத்திரங் கண்ப் படைத்து இந்த நாடகத்தில் உலவ விட்டிருக்கிருள் ஆசிரியர். அவர்கள் இந்த நாடகத்தில் நகைச்சுவை மண்க்கும் படி செய்கிருர்கள். . . . . . - ஒவ்வொரு காட்சியும் சுவையுள்ள உரையாடல்களுடன் விளங்குகிறது. நாடகத்தின் முடிவில் திருவள்ளுவரின் மதிப் புக்குரிய உருவமும் வாசுகியின் கற்புத் திருவுருவமும் படித்த மக்களின் உள்ளத்தில் பதியும்படியாக அமைந்துள்ளது. அன்பர் திரு நாரண துரைக்கண்ணனுடைய கற்பனையை யும், பழமையும், புதுணையும் இனத்துச் சுவைபட காட்சிகள்ை அமைத்திருக்கும் பாங்கையும் பாராட்டுகிறேன். இத்தகைய நூல்கள் இன்னும் பலவற்றை எழுதி இந் நூலாசிரியச் புகழும் பயனும் பெற வேண்டுமென்று வாழ்த்து. கிறேன். - * - -- - - - - - --> .கி.வா. ஜகந்நாதன் 1 سگ سو