பக்கம்:தெய்வப் பாடல்கள்.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.

இராமர் ஊசற்பாட்டு

சீரான பொற்பலகை திகழக் கோத்துச்

செம்பவளக் கால்நான்கு சேர நாட்டி ஏரான வயிரச்சங் கிலியும் துரக்கி

ஏற்றமர கதக்கொடுங்கை இணக்கிப் பூட்டி நேரான நவரத்னம் இழைத்த பீடம்

நிகரில்முத் துத்தொங்கல் நிறைந்த ஊசல் பேரான ஜானகியாள் பிணையாய்க் கூடப்

பெருமையுறு ரீராமர் ஆடிர் ஊஞ்சல்.

தேவர் முதல் விஞ்சையர்கள் தெளியாழ் வல்லோர்

திரளாக வந்துஜய விஜய என்ன பாவில் திரு வாய்மொழியைப் பலருங்கூடிப்

பாவையர்கள் குழுமிமனம் களிக்கப் பண்ணக் காவிக்கலேத் துறவர்மனம் கனிந்து போற்றக்

களங்கமிலா அடியர்குழாம் கலந்து துன்னத் தேவி.ஜானகியனங்கைச் சிறப்பாய்க் கூடித் திகழும்தச ரதராமர் ஆடி ரூஞ்சல்,

சங்கீத வாத்தியங்கள் தழங்க வேத

சாமகா னமுமெய்யர் தழைக்க ஒத இங்கிதமாய்க் கணிகையரும் ஏற்பாய்ப் பாவ

இராகதா ளங்களுடன் இசைய நாதம் எங்கனும்பே ரொலிகேட்க இனிதாய் ஆடி இன்பமாய் லாலிஎச் சரிக்கை பேச, மங்களமாய் ஜானகியை மணமாய்க் கூடி

மனமகிழும் ரீராமர் ஆடிர் ஊஞ்சல்,